இராணுவ முகாமிருந்த ஷங்ரிலா ஹோட்டல் தளத்தில் மனித எச்சங்கள் மீட்பு

கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஷங்ரிலா ஹோட்டல் கட்டுமான தளத்திலிருந்து மனித எச்சங்கள் சில மீட்க்கப்பட்டுள்ளன.

இந்த மனித எச்சங்கள் இன்று மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஹோட்டலின் நிர்மாணப் பணிகளுக்காக மண்ணை அகழும் போதே மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் மயானம் அமைந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்க்கப்பட்ட மனித எச்சங்களை பகுப்பாய்விற்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, ஷங்ரிலா ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் இடத்தில் முன்னர் ஸ்ரீலங்கா இராணுவ முகாம் அமைந்திருந்தாக குறிப்பிடப்படுகிறது.

இதனால் யுத்த காலங்களில் காணாமல் போனவர்கள் மற்றும் கடத்திச் செல்லப்பட்டவர்கள் இங்கு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

You might also like