பேரழிவுகளிலிருந்து மக்களை பாதுகாக்க இலங்கையின் புதிய தொழில்நுட்பம்!

பேரழிகளை ஏற்படுத்தும் காலநிலைகளை கண்டறிந்து கொள்ளவதற்கான புதிய தொழில்நுட்பத்தை இலங்கை வளிமண்டவியல் திணைக்களம் அறிமுகம் செய்யவுள்ளது.

ஆபத்தான காலநிலை தொடர்பில் மக்களுக்கு முன்கூட்டியே தகவல்களை வழங்குவதற்காக Doppler Radar வலையமைப்பு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

இந்த புதிய கட்டமைப்புக்கான நிதியுதவியை ஜப்பான் அரசாங்கம் வழங்கவுள்ளது. செலவிடப்படும் தொகை 3422 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தொகை பணத்தை ஜப்பான் சர்வதேச உதவி நிறுவனத்தின் ஊடாக வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

அதற்கான ஒப்பந்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையினால் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like