இலங்கையின் மனித உரிமைகள் மீண்டும் மீளாய்வு

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு எதிர்வரும் நவம்பர் மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்படவுள்ளது.

இதற்கான யோசனையை புருண்டி, கொரியா, பொலிவியா ஆகிய நாடுகள் முன்வைக்கவுள்ளன.

இதன்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் பரிந்துரைத்த யோசனைகள், அதன் நிறைவேற்றங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன.

எனவே இந்தக்காலப்பகுதிக்கு முன்பதாக இலங்கை மனித உரிமைகள் விடயங்களில் பல்வேறு அடைவுமட்டங்களை நிறைவேற்றவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளது.

You might also like