புளியங்குளம் புரட்சி விளையாட்டு கழகத்தின் ஏற்ப்பாட்டில் மாபெரும் கலாசார விளையாட்டு விழா

வவுனியா புளியங்குளம் புரட்சி விளையாட்டு மைதானத்தில் இன்று (14.05.2017) காலை 9.00மணி முதல் மாலை 7.00மணி வரை மாபெரும் கலாசார விளையாட்டு விழா நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்காக பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன. விளையாட்டுப்போட்டிகளை பிரதம,சிறப்பு விருந்தினர்கள் ஆரம்பித்து வைத்தனர்.

இந் நிகழ்வின் முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர் செ.மயுரன் , வவுனியா வடக்கு கலாசார உத்தியோகத்தர் செ. விஜிதா, புளியங்குளம் இந்துக்கல்லூரி அதிபர் ச.பரமேஸ்வரன் , புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதானகே

கௌரவ விருந்தினர்களாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் பா.சிந்துஜன், வவுனியா மாவட்ட சம்மேளனத் தலைவர் காண்டிபன், முன்னாள் வவுனியா மாவட்ட சம்மேளனத்தலைவர் தே.அமிர்தராஜ் , வவுனியா வடக்கு விளையாட்டு உத்தியோகத்தர் வி.பிரிட்டோ, வவுனியா வடக்கு இளைஞர் விளையாட்டு உத்தியோகத்தர் இப்ராஸ், புளியங்குளம் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் பெ.நாகேந்திரா , வவுனியா தெற்கு ஒய்வுநிலை கிராம சேவையார் நா.யோகராசா மற்றும் கிராம, மாதர் சங்க அபிவிருத்திச்சங்கங்கள் மற்றும் ஆலய நிர்வாகங்கள், வர்த்தகசங்கம், கமக்கார அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.

முட்டியுடைத்தல், தலையணை சண்டை, சருக்கு மரம் ஏறுதல் என பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன

​.​

You might also like