முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கொள்ளை

கிளிநொச்சியில், முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானம் மற்றும் களஞ்சிய அறை உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஆலய பூசை முடிந்த பின்னர் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் இன்று காலை ஆயலத்திற்கு சென்று பார்த்த போது ஆலயத்தின் மூலஸ்தான கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அம்பாளுக்கு அணியப்பட்டிருந்த தங்க நகைகள் களவாடப்பட்டு இருந்ததாகவும், களஞ்சிய அறை உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு தொகை பணமும் கொள்ளையிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like