வவுனியா மாவட்ட கரப்பாந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் வெற்றி

வவுனியா மாவட்ட கரப்பாந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் வெற்றி

வவுனியா இளைஞர் கழகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியா மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான நான்கு அணிகள் கொண்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.

சிறி சுமன விளையாட்டு கழகமும் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கும் இன்று (14.05.2017) வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இறுதி கரப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

இப் போட்டியில் சிறி சுமன விளையாட்டு கழகத்தினை 4 புள்ளிகள் வித்தியாசத்தில் கூமாங்குளம் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று தேசிய ரீதியில் நடைபெறும் கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவாகியது

சிறி சுமன விளையாட்டு கழகம் – 20 புள்ளிகளையும் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் 24 புள்ளிகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கூமாங்குளம் கிராமத்திற்கு மட்டுமன்றி வவுனியா மாவடத்திற்கே பெருமையினை தேடித்தந்துள்ளனர்.

You might also like