மகளுக்கு ஏற்பட்ட காதல்! முன்னாள் பொலிஸ் அதிகாரியின் அட்டகாசம்

ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் குடிபோதையில் வந்து வீட்டிலுள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக பெண் ஒருவர் முறைபாடு செய்துள்ளார்.

அனுராதபுரம், தலாவ பகுதியை சேர்ந்த வீடொன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலாவ பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரியே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி கத்தியுடன் பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளார்.

குறித்த நபர் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் லொரியின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டினுள் பலவந்தமாக நுழைந்து வீட்டில் இருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை அடித்து உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்த பெண்ணுக்கு அவர் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும், அருகில் இருந்த வீடுகளுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 119 என்ற அவசர பொலிஸ் இலக்கத்தில் முறைப்பாடு செய்ததாக குறித்த வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி தற்போது தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டின் இளைஞரை, ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகள் காதலித்து சட்ட ரீதியாக திருமணம் செய்துள்ளார். அந்த திருமணத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like