இலட்சியத்தை நினைவில் வைத்து கற்றதாலேயே இந்த நிலையை அடைய முடிந்தது-கணிதப்பிரிவில் முல்லைத்தீவில் முதலிடம் பெற்ற மாணவன்

நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் வெளியாகிய பெறுபேறுகளினடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கணித பிரிவில் 2A B பெறுபேறுகளை பெற்று புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி மாணவன் சந்திரபாலன் சதுர்ஷன் முதல் நிலையை பெற்றுள்ளார்.

தன்னுடைய பெறுபேறுகள் குறித்து கருத்து தெரிவித்த சதுர்ஷன்

சந்திரகுமார் சதுர்ஷன் ஆகிய நான் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் 2AB சித்திகளைப்பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முத்லிடத்தைப்பெற்றுள்ளேன்.என்னுடைய வெற்றிக்கு ஊக்கமளித்த,பெற்றோர்,ஆசிரியர்கள்,நண்பர்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் கட்டட கலையில் தேர்ச்சிபெற்று எனது மண்ணை விந்தை மிக்கதாக மாற்றவேண்டும் என்பதே எனது இலட்சியமாகும். மேலும் நான் கல்வி கற்கும்போது எனது இலட்சியத்தை நினைவில் வைத்து வைத்து கற்றதாலேயே இந்த நிலையை அடைய முடிந்தது.அவ்வாறு ஒவ்வொரு மாணவனும் தனது இலட்சியத்தில் சரியாக சென்றால் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெறமுடியும் என்றார்.

You might also like