தனியார் காணி என்பதால் எமக்கு உதவுவதற்கு பயப்படுகின்றனர்: பன்னங்கண்டி மக்கள் ஆதங்கம்

“தனியார் காணி என்பதால் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் எமது விடயங்களில் தலையிடுவதற்குத் தயங்குகின்றனர்” என பன்னங்கண்டி மக்கள் தமது ஆதங்கத்தினைத் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னர் இப்பிரதேசங்களில் குடியேறியுள்ள தமக்கு, குறித்த காணியின் அனுமதிப்பத்திரங்களை காணியின் உரிமையாளர் வழங்கவேண்டும் என கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 56ஆவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாம் காணியின் பெறுமதியினைத் தருவதாக கூறியவேளையில் காணி உரிமையாளர் இந்தக்காணிகளுக்கான விலையினை மிகவும் உயர்த்திச் சொல்கின்றார். நாளாந்தம் கூலிவேலைக்குச் செல்லும் நாங்கள் அந்தளவு பணத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனிதாபிமான அடிப்படையில் எங்களுக்கு உதவவேண்டும்” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

You might also like