உலகளாவிய ரீதியாக ஏற்படவுள்ள மற்றுமொரு ஆபத்து! வல்லுநர்கள் எச்சரிக்கை

உலக அளவில் கணனி கட்டமைப்புகளில் மற்றுமொரு இணையவழி தாக்குதல் மேற்கொள்வதற்கான ஆபத்து உள்ளதாக கணனி வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை இந்த இணையத்தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை உலகளாவிய ரீதியில் 99 நாடுகள் மீது ransomware attack எனப்படும் இணைய வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாடுகளின் கணனி கட்டமைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

ஸ்பெயின், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது இணையவழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்மூலம் சுமார் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் கணனி கட்டமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like