வவுனியா நகர மத்தியில் முள்ளிவாய்க்கால் தினம் அனுஸ்டிப்பு

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று (14.05.2017) மாலை 6.00 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டார வன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக இடம்பெற்றது

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன், வடமாகாணசபை உறுப்பினர் செ.மயுரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்ததின்போது உயிரிழந்தவர்களுக்கான  ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

You might also like