அரச உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளராக பணியாற்ற முடியாது: வவுனியாவில் ??

அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளராக பணியாற்ற அமைச்சின் செயலாளர்களிடம் அனுமதி பெறவேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாபன விதிக்கோவையின் 47 ஆவது அத்தியாயத்தின் 8ம் இலக்கத்தின் 6வது பந்தியின் பிரகாரம் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் ஊடகவியலாளராக பணியாற்ற வேண்டுமாக இருந்தால் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் அனுமதி பெறவேண்டும்.

வவுனியாவிலும் இவ் சட்ட மூலம் கொண்டு வரப்படுமா?  அரச உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் சரிவர தங்கள் பணியினை புரியாது ஊடகத்தில் முழு நேரமாக பணிபுரிகின்றனர்.  வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் இவ் விடயத்திற்கு உடந்தையா?

மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தை பெற்றுக்கொண்டு மறுபக்கம் ஊடகத்திலும் சம்பளம் .மக்களுக்கு சேவையை மேற்கொள்ளமால் ஊடகத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

உயர் அதிகாரிகள் எதும் கேட்டால் ஊடகத்தினை பயன்படுத்தி தப்பி வருவதாகவும் தெரியவருகின்றது

You might also like