வட பிராந்திய வானிலையில் மாற்றம்? வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் வடப் பிராந்தியத்தில் மணிக்கு 50 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் காற்றும் பலமாக வீசக்கூடும். எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அந்த திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

 

You might also like