முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு டெங்கு ஒழிப்பு வடக்கில் ஒத்திவைப்பு!

தேசிய டெங்கு ஒழிப்புத்திட்டத்தின் திகதிகளை மாற்றும்படி மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அறிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் குழப்பும் வகையில் மத்திய அரசினால் இம்மாதம் 18ஆம் 19ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவிருந்த டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் திகதிகளையே அமைச்சர் மாற்றுமாறு பணித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிடுகையில்,

“மத்திய அரசினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் குழப்பும் வகையில் கொண்டு வரப்பட்டிருந்த டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் திகதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி எதிர்வரும் 22ஆம்,23ஆம் திகதிகளில் மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது.

உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாளில் இவ்வாறு தேசிய நிகழ்வுகளை நடத்துவது பல இடையூறுகளை ஏற்படுத்துமென்பதால் அத்திகதிகளை மாற்றுமாறு கோரியுள்ளேன்” என அமைச்சர் ப.சத்தியலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

 

You might also like