கடைக்கு சென்ற என் அம்மா எங்கே? தனது தாயை தொலைத்த மகள் கேள்வி

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 71   அவது நாளாக தொடர்கின்றது.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தொடர்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைதீவுமாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கின்றது.

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுமியொருவர் வவுனியாவில் கடைக்கு வேலைக்கு சென்றவேளை காணாமல்போன தனது தாய் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார்

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து வவுனியா செட்டிகுளம் வலயம்-04   முகாமில் வாழ்ந்தபோது தனது 3 பிள்ளைகளையும் வாழ வைப்பதற்காக வறுமை காரணமாக வவுனியா கச்சேரி சிற்றுண்டிச்சாலையில் வேலைக்கு சென்றவர் 2010.07.20 ஆம்   திகதி  வேலைமுடித்து வீடு திரும்பியவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை அவர் எங்கே என மகள் கேள்வியெழுப்பியுள்ளார்

இதேவேளை தனது மகள் காணாமல்போனதிலிருந்து இன்று வரை அவருடைய பிள்ளைகளை வழப்பதற்கு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், கச்சான் வித்தே பிள்ளைகளை வழப்பதாகவும், தன்னால் உழைக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் எனவே தனது மகளை விரைவில் தன்னிடம் ஒப்படைக்குமாறும் தாயார் கோரியுள்ளார்.

You might also like