புளியங்குளம் புதூர் புகையிரதக்கடவையில் ரயில்மோதி இருவர் பலி

வவுனியா, புதூர் செல்லும் வீதியிலுள்ள புகையிரதக் கடவையில் இன்று (15) பிற்பகல் ரயிலுடன் உழவு இயந்திரம் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கொழும்பிலிருந்து இன்று பிற்பகல் 1.35 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, புளியங்குளம் புதூர்  ஆலயப்பகுதியிலிருந்து பிரதான கண்டி வீதிக்கு மணல் ஏற்றப்பட்ட உழவு இயந்திரம் சென்றபோது புதூர் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை உழவு இயந்திரம் கடக்கும்போது திடீரென வந்த ரயிலுடன் உழவு இயந்திரம் மோதியதில் உழவு இயந்திரத்தின் சாரதி, மற்றும் உதவியாளரான ஜெகநாதன் ரவீதரன் வயது 20, ரவீந்திரன் கீர்த்தீபன் 21வயது புதூர், மற்றும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like