வவுனியாவில் அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!!

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று (15.05.2017)இடம்பெற்ற நிலையில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த கூட்டம் அமைச்சர் ரிசாட் பதியுதீன், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தின் போது செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை மாவட்ட செயலக அரச அதிகாரி ஒருவர் தாக்கி அங்கிருந்து வெளியேற்ற முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இடம்பெற்றபோது அங்கு நின்ற ஏனைய ஊடகவியலாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மாவட்ட செயலக அரச அதிகாரி அதிலிருந்து விலகிச் சென்றுள்ளார்.

You might also like