வவுனியாவில் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் புதிய பேரூந்து நிலையம்

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று  இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை 22.05.2017 முதல் வவுனியா புதிய பேருந்து நிலையம் மக்களின் பாவனைக்கு மீண்டும் திறந்து வைக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டது

மேலும் இக்கூட்டத்தில்,

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வர்த்தகமாணி அறிவித்தல் வழங்கப்படும் என்றும் அத்துடன் வவுனியா மாவட்ட அரச அதிபர் திரு ரோகண புஷ்பகுமார தலமையில் விசேட குழு ஒன்று இது சம்பந்தமான அறிவறுத்தல்களை வழங்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டதுடன் மகாணங்களுக்கான அரச பற்றும் தனியார் பேருந்துக்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் உள்ளூர் சேவைகளுக்கான அரச மற்றும் தனியார் பேருந்துக்கள் பழைய பஸ்நிலையத்தில் இயங்கும் எனவும் முடிவெடுக்கப்பட்டது

You might also like