யாழ். பருத்தித்துறையில் வாள்களுடன் வீதியில் ஓடிய இளைஞர்கள்!

யாழ். பருத்தித்துறை – கற்கோவளத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோதலில் ஈடுபட்ட நபர்கள் வாள்களாலும், பொல்லுகளாலும் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது இரண்டு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதுடன், பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், பொலிஸாரின் நடவடிக்கையால் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இரு குழுக்களாக பிரிந்து நின்று இளைஞர்கள் வாள்களுடனும், பொல்லுகளுடனும் வீதியில் ஓடியுள்ளனர். இதனால் மக்கள் அச்சமடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like