வவுனியா ஊடகவியலாளர் சங்கத்திற்கும் இடம் ஒதுக்க வேண்டும் – காதர் மஸ்தான்

வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தகர் சங்கம், கட்டிட நிர்மாணப்பொருள்கள் விற்பனையாளர்கள் சங்கம் என்பனவற்றிற்க இடம் ஒதுக்கும்போது, முச்சக்கர வண்டி சங்கம் ,ஊடகவியலாளர் சங்கம் என்பவற்றுக்கும் இடம் ஒதுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஷ்பகுமார தலைமையில் இன்று  இடம்பெற்ற வவுனியா மாவட்டத்துக்கான மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேரூந்து தரிப்பட மத்திய நிலையத்துக்கு அருகாமையில் முதலமைச்சர் அனுமதி வழங்கினால் வவுனியா வர்தகர் சங்கத்திற்கும் கட்டிட நிர்மாணப்பொருள்கள் விற்பனையாளர் சங்கம் என்பவற்றுக்கு இடம் ஒதுக்கும்பொழுது அவற்றுடன் ஊடகவியலாளர் சங்கத்திற்கும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த கலந்துரையாடலில் வவுனியா புதிய பேரூந்து பஸ் தரிப்பிட நிலையத்தை மீண்டும் பயன்படுத்துதல், வவுனியா மன்னார் பிரதான வீதியை விரைவில் காபட் வீதியாக மாற்றுதல், காணிகள் தொடர்பான பிரச்சினைகள், மற்றும் இந்த வருடத்தில் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், எதிர்கால திட்டமிட்டல்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

குறித்த மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன், அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வைத்தியர் சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா உட்பட மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், நிர்வாகம் சார் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

You might also like