பாடசாலை மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பெண்ணுக்கு கடுங்கால சிறைத்தண்டனை

பாடசாலை மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பெண்ணொருவருக்கு கடுங்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துஷ்பிரயோக நடவடிக்கையில் இராணுவ வீரர் ஒருவரின் மனைவிக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கு தலா 7 வருடங்கள் கடுங்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுளள்து.

அனுராதபுரம் விசேட நீதிமன்ற நீதிபதி மஹேஷ் வீரமன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனைகளுக்கு மேலதிக ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கு 500 ரூபாய் அபராத பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த முடியாத பட்சத்தில் மேலும் மூன்று மாதங்களுக்கு ளிமையான வேலைகளுடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி கர்ப்பமாக உள்ளமையினால் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு தனித்தனியாக விதிக்கப்பட்ட மூன்று வருடங்களுக்கான சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்கும் வகையில் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

28 வயதான ரன்பிட்ட தேவாலயகே பிரியங்கிகா சமன் குமாரி என்ற பெண்ணுக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியினால் 2011ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதியில் இருந்து 2012ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கமைய 365 (ஆ)2 என்ற பிரிவின் கீழ் தண்டனை பெற்றுக் கொள்ள கூடிய பாரிய குற்றம் மேற்கொண்டுள்ளதாக சட்டமா அதிபரினால் அனுராதபுர உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்ணின் கணவர் இராணுவத்தில் சேவை செய்வதனால் மாதத்தில் ஒரு முறை மாத்திரமே வீட்டிற்கு வருவதனால் குற்றவாளி இரவு நேரங்களில் உறங்குவதற்காக மாணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். சில சந்தர்ப்பங்களி்ல மாணவரை அவரது வீட்டிற்கு அழைத்து வந்து பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

You might also like