கிளிநொச்சி மாவட்ட கடல் உற்பத்தி வீதம் வீழ்ச்சி

கிளிநொச்சி மாவட்டத்தின் மொத்த கடல் உற்பத்தியானது 2015 ஆம் ஆண்டை விட 2016 ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்துள்ளதாக மாவட்ட கடற்தொழில் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்தொழில் திணைக்களம் வெளியிட்டுள்ள உற்பத்தி குறித்த புள்ளி விபரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் 11,189 மெற்றிக் தொன் கடல் உற்பத்தி பெறப்பட்டுள்ள போதிலும் கடந்த ஆண்டு 851 மெற்றிக் தொன்களால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டில் சட்ட விரோத மீன்பிடி தொடர்பில் நீதிமன்றங்களில் 30 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த புள்ளி விபரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடற்தொழிலை மாத்திரம் நம்பி 3,914 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like