வவுனியா பம்மைமடு வைகரை நோயாளிகளுக்கு காற்று மெத்தை வழங்கி வைப்பு

வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து சுமார் 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வைகறை  புனர்வாழ்வு நிலையம் வடக்கின்  முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஓளியை ஏற்றும் இடமாக மாறிவருகின்றது.

இவற்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நிலமையினை கருத்தில் கொண்டு வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் அவர்களின் ஏற்ப்பாட்டில் லண்டன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பினால் இன்று (16.05.2017) மாலை 3.30மணியளவில் சுமார் ஒரு லட்சம் பெறுமதியான ஒன்பது காற்று மெத்தை (bubble matress) வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ் வாசன், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 13க்கு மேற்ப்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

You might also like