கிளி. கனகபுரத்தில் வாள்வெட்டு: ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது சற்றுமுன்னர் நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த தம்பதியர் மீதே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹோட்டலின் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில், குறித்த தம்பதியர் ஹோட்டலை ஒப்படைத்துவிட்டு, ஹோட்டல் உரிமையாளரிடம் முற்பணத்தை கோரியுள்ளனர்.
அதன்போது இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், உரிமையாளர் மேற்படி தம்பதியர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.