அக்கராயன் பொதுநோக்கு மண்டபம் திறப்பு விழா
மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, கிளிநொச்சி அக்கராயன் பொதுநோக்கு மண்டபம், இன்று திறந்து வைக்கப்பட்டது.
அக்கராயன் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சின்னையா மோகனகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கராயன் பங்குத் தந்தை வண. பிதா ஜோன் பற்றிக் அடிகளார் கலந்து கொண்டு மண்டபத்தை திறந்து வைத்தார்.
ஜப்பான் அரசின் 29 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் இக்கட்டடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.