கிளிநொச்சியில் யுத்தம் நடைபெற்ற இடங்களில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கை

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தம் நடைபெற்ற இடமாகக் காணப்படுகின்ற ஜெயபுரம் பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவான் வன்னேரிக்குளம் தேவன்கட்டுக்குளம் ஆகிய பகுதிகள் யுத்த காலத்தின் போது அதிகளவான வெடிபொருட்கள் புதைக்கப்பட்ட பகுதியாக காணப்படுகின்றன.

இந்த நிலையில் மக்கள் மீள்குடியேறியிருக்கின்ற போதும் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது தேவன்கட்டு, பண்டிவெட்டிக்குளம் ஜெயபுரம் தெற்கு ஆகிய பகுதிகளில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதிகளவில் இராணுவ மண் அணைகள் கைவிடப்பட்ட காவலரண்கள் ஆகியவற்றிலும் ஏனைய இடங்களிலும் வெடிபொருட்கள் காணப்படுவதாகவும் கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதற்கான வரைபடங்கள் இன்மையால் இவற்றை அடையாளம் கண்டு அகற்றுவது பாரிய சவாலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like