கிளிநொச்சியில் வீதி புனரமைக்கபடாமையினால் மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி பல்லவராயன் கட்டுச்சந்தியிலிருந்து, அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தி வரைக்குமான பிரதான வீதி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியின் ஊடாக பயணிக்கின்ற வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி பூநகரி மன்னார் வீதியையும், ஏ-9 வீதியையும் இணைக்கின்ற பிரதான வீதியாகவும், மாவட்டத்தின் அதிக சனத்தொகையைக் கொண்ட கிராமங்களினதும், உப நகரத்தினதும் பிரதான வீதியாகக் காணப்படும் இந்த வீதியானது எவ்வித புனரமைப்புக்களும் இன்றி பாரிய குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றது.

பல்லவரான் கட்டுச்சந்தியிலிருந்து ஜெயபுரம், கரியாலை, நாகபடுவான், வன்னேரிக்குளம் சோலை, பல்லவராயன் கட்டு ஐயனார்புரம், ஆனைவிழுந்தான், ஸ்கந்தபுரம், மணியங்குளம், சாலோம்நகர் உள்ளிட்ட அதிகளவான மக்கள் தொகை வாழ்கின்ற கிராமங்களின் பிரதான வீதியாகவும் காணப்படுகின்றது.

கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மொத்தச் சனத்தொகையின் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தப்பகுதியிலேயே வாழ்கின்றனர்.

இந்த மக்கள் தமக்கான எந்த அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருந்தாலும் இந்த வீதியூடாகவே பயணிக்க வேண்டியுள்ளது.

மேலும், இந்த வீதியானது புனரமைக்கப்படாமையினால் அந்தப் பகுதிகளில் வாழுகின்ற மக்கள் அன்றாட போக்குவரத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றதாக குறிப்பிட்ப்படுகின்றது.

You might also like