16 ஆவது நாளாகவும் தொடரும் இரணைதீவு மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

“நாங்கள் நல்ல திடகாத்திரமுள்ள சுகதேகிகளாக வாழ்ந்தோம். எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் நோயாளிகளாகவும், பொருளாதாரம் அற்றவர்களாகவும் வாழ்ந்து வருகின்றோம்” என கிளிநொச்சி இரணைதீவு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு பகுதியில் சென்று குடியேறுவதற்கும், தொழில் செய்வதற்கும் அனுமதிக்கக் கோரி இரணைதீவு மக்கள் இன்றும் 16 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரணைதீவில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் கடந்த கால யுத்தத்தின் காரணமாக 1992ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இதுவரை மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

குறித்த பகுதி மக்கள் தங்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேறவும் அங்கு சென்று தங்களது வாழ்வாதாரத் தொழிலான கடற்தொழிலை செய்வதற்கான முழு அனுமதியினையும் பெற்றுத்தரக் கோரி கடந்த மே மாதம் 1 ஆம் திகதி முதல் இரணைமாதாநகர்ப் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், இந்த போராட்டம் 16 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like