வவுனியா ஆச்சிபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 20வருட கடூழிய சிறைத்தண்டனை

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில்  2014ஆண்டு 11வயது சிறுமியை மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குத் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று கடந்த 16.11.2016 அன்று சட்டமா அதிபரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இன்றைய தினம் வழக்கு தீர்ப்பிற்கு எடுத்துக்கொள்ள்பட்டபோது குறித்த நபரை  வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குற்றவாளியாகக்கண்டு எதிரிக்கு 20வருட கடூழியச்சிறையும் 10ஆயிரம் ரூபா தண்டமும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5இலட்சம் ரூபா நட்ட ஈடு வழங்குமாறும் தீர்ப்பளித்தார்.

நட்ட ஈட்டுப்பணத்தை செலுத்தத்தவறும் பட்சத்தில் ஒரு வருட கடூழிய நிறைத்தண்டனையும், தண்டப்பணம் செலுத்தத்தவறும் பட்சத்தில் ஒரு மாதம் சாதாரண சிறையும் வழங்கப்பட்டது.

வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்கினேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.

You might also like