வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் விஜயம்

​வவுனியாவில்  போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (1​6​.05.2017) 8​2​ ஆவது நாளாகவும்  தற்காலிக தகரக் கொட்டகைக்குள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். 

யாழ்ப்பாணத்திருந்து வந்த ​​​காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ​ஆதரவினை வழங்கியதுடன் நாங்கள் சாகும்வரை எமது ​பிள்ளைகளை தேடிக்கொண்டு தான் இருப்போம் என்று ​தெரிவித்தனர்.

​அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 1996ஆம் ஆண்டு எங்களுடைய பிள்ளைகள் காணாமற்போயுள்ளது​.​ 1997ஆம் அண்டு இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் ​அன்றிலிருந்து இன்று வரையும் எமது ​பிள்ளைகளை; தேடிக்கொண்டு ​இருக்கின்றோம்.

​எங்களினால் எவ்வளவோ போராட்டம் ​மேற்கொள்ளப்பட்டது​ ​ஒன்றிற்கும் தீர்வு கிடைக்கவில்லை. இன்று வவுனியாவில் 82​ ​நாள்களாக போராட்டம் மேற்கொண்டு ​வருபவர்களுக்கு அதரவு வழங்குவதற்காக இன்று யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு வந்துள்ளோம்​ என​ ​தெரிவித்தனர்.

You might also like