சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தர்மபுரத்தில் பொலிஸார் கலந்துரையாடல்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் பிரச்சினைகளை அறிந்து, தீர்த்துக்கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் நான்கு மணியளவில் தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் றொசான் ராஜபக்ச கலந்து கொண்டார்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்பிற்கமைய இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் குறிப்பாக பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

சட்டவிரோத செயற்பாடுகளான கசிப்பு, மரம் மணல் கடத்தல் போன்ற செயற்பாடுகளை மிக விரைவில் ஒழிக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு அமைவாக பல்வேறு நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு தாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக்கொண்டனர்.

அத்தோடு இந்த நடவடிக்கையில் முதற்கட்டமாக கல்லாறு பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்படடுள்ளது.

இதேவேளை, இக் கலந்துரையாடலில் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

You might also like