வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகளை தேசிய இளைஞர் விருதுப்போட்டியில் பங்கேற்குமாறு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் அழைப்பு!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 2017 ஆம் ஆண்டுக்கான 39 ஆவது தேசிய இளைஞர் விருதுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்போட்டியானது பிரதேசம், மாவட்டம், தேசியம் என மூன்று மட்டங்களில் நடாத்தப்படவுள்ளன.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளை இவ் தேசிய இளைஞர் விருதுப் போட்டியில் பங்கேற்று, வெற்றிபெற்று மாவட்டத்தின் பெருமையை பறைசாற்ற வேண்டும் என இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன்  கோரிக்கை விடுத்துள்ளார்.

போட்டிக்காக விண்ணப்பிப்பவர்கள் 13 வயதிற்கும், 29 வயதிற்கும் உட்பட்டவர்களாக இருக்க வேண்டியதோடு, நாடகப் போட்டிக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 வயதிற்கும், 35 வயதிற்கும் இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்திலக்கிய விருதுப் போட்டிகள், அறிவிப்பாளர் (ஆங்கிலம், தமிழ்), பேச்சு (ஆங்கிலம், தமிழ்), இளம்பாடகர் (ஆங்கிலம், தமிழ்), கிராமியப் பாடல், கிராமிய நடனம், புத்தாக்க நடனம், பரத நாட்டியம், அபிநயம், சாஸ்திரிய இசைக்குழுக் கருவிகள் இசைத்தல், புகைப்பட வடிவமைப்பு   ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இளைஞர் யுவதிகளின் கலை, கலாசார திறமைகளை தேசிய ரீதியில் கொண்டுசெல்வதற்கு மிகச் சிறந்த தளமாக இது அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி போட்டிக்கான விண்ணப்பிக்கும் திகதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான விண்ணப்பம் தொடர்பான மேலதிக விபரங்களை மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர்  சு.காண்டீபன் (0763806990) அல்லது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் (0775058672)    எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like