யாழ். சாவகச்சேரியில் கணவனை கடத்திய பெண்ணை கத்தியால் வெட்டிய பெண்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் பெண் ஒருவரையும் அவரது மகனையும் கத்தியால் வெட்டி காயப்படுத்திய இளம் குடும்பப் பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது. இதன் போது வழக்கை விசாரித்த நீதிவான் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண்ணை 25,000 ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தனது கணவனை கடத்திச் சென்ற 30 வயதுடைய பெண்ணையும் அவரது மகனையும் 26 வயதான குறித்த இளம் குடும்பப் பெண் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

பின்னர் தனது 2 மாதக் குழந்தையுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு இலக்காகிய தாயும், மகனும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

தனது கணவனை குறித்த பெண் கடத்தியதாகவும் இதன் காரணமாகவே அவரையும் அவரது மகனையும் தாம் கத்தியால் வெட்டியதாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

You might also like