முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கிளிநொச்சியிலும் வழமைபோல்

தமிழினப் படுகொலை நாளான மே18 நினைவேந்தல் நிகழ்வுகளை வழமைபோன்று இம்முறையும் கிளிநொச்சியில் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக்கிளை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வு கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் 2017 மே 18ஆம் திகதி மாலை 4 மணிக்கு சர்வமத பிரார்த்தனைகளுடன் நடைபெறவுள்ளது.

உலக வரலாற்றில் தமிழர்களை இல்லாது ஒழிக்கவேண்டும் என்கின்ற எண்ணத்தோடு இலங்கை அரசினால் அரங்கேற்றிய கொடூர யுத்தத்தின் நினைவேந்தல் நிகழ்வு சர்வமதத்தலைவர்களின் மத ஆராதனைகளுடனும் இறைவணக்கத்துடனும் இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு அனைத்துபொது அமைப்புக்கள், மதத்தலைவர்கள், மாணவர்கள், மக்கள் என அனைவரையும் கலந்துகௌ்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை, 2010ஆம் ஆண்டு முதல் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரார்த்தனை நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

You might also like