யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளின் நினைவுகளை மீட்டும் பாவைகள்

யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்ட மிகக்கொடூரமான மனித அவலங்களின் காட்சிகள் இன்றும் அழியாமல் இருக்கின்றது.

விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் நோக்கில் இலங்கையின் முப்படையினர் வடக்கில் பெரும் யுத்தத்தை முன்னெடுத்தனர். இதன் இறுதி கட்டமாக முள்ளிவாய்க்காலில் கொடிய யுத்தம் இடம்பெற்றது.

இறுதியுத்தத்தினால் பல்லாயிரக்கணக்காண அப்பாவி பொதுமக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சிறுவர்கள், குழந்தைகளின் உயிரிழப்புகள், பொதுமக்கள் மத்தியில் மறக்க முடியாத கொடூர நிகழ்வாக பதிந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வுகள் மே 18 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் இங்கு காணப்படும் பாவைகளின் கொடூர காட்சிகள் அன்றைய சிறுவர்களின் உயிரிழப்பை பொதுமக்கள் மத்தியில் மீண்டும் நினைவுபடுத்தி நிக்கின்றது.

You might also like