பேஸ்புக்கில் பெண்களின் புகைப்படங்களை காட்டி ஆண்களை ஏமாற்றும் மோசடி வர்த்தகம்

இணையத்தளத்தில் பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவற்றில் ”விருப்பமான பெண்களுடன் ஒரு இரவை கழிப்பதற்கு வாய்ப்பு” என கூறி ஈசி கேஷ் ஊடாக பணம் கொள்ளையடிக்கும் செயற்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.

குருணாகல் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெயரை குறிப்பிட்டு பேஸ்புக் கணக்கு ஒன்று தயாரிக்கப்பட்டு இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பெண்களின் புகைப்படங்கள் அந்த பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அந்த பெண்களின் பெயர், வசிக்கும் இடங்கள், வயது மற்றும் ஒரு பெண்ணுக்கான செலவு ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண்களை விரும்புபவர்கள் ஒரு பெண் அல்லது பல பெண்களுடன் நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அதற்கமைய விருப்பமான பெண்ணின் புகைப்படத்தை தெரிவு செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொண்டதன் பின்னர், முதலாவதாக வழங்கப்படும் இலக்கத்திற்கு ஈசி கேஷ் ஊடாக பணம் செலுத்துமாறு தொலைபேசி அழைப்பினை ஏற்கும் நபர் தெரிவிப்பார்.

பணம் வைப்பிலிட்டதன் பின்னர் அந்த பெண் தங்கியிருக்கும் விலாசம் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

அத்துடன் பணம் வைப்பிலிடாமல் பெண் தங்கியிருக்கும் இடத்தை அறிவிக்க முடியாதெனவும், முழுமையான பணத்தை வைப்பிலிட்டால் மாத்திரமே விலாசம் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பெண்களையும் தொடர்பு கொள்வதற்காக ஒரே தொலைபேசி இலக்கம் மாத்திரமே காணப்படுகின்ற நிலையில் ஈசி கேஷ் செய்வதற்காக வேறு தொலைபேசி இலக்கம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்து ஏமாற்றமடைந்து பணம் வைப்பிலிட்ட பலர் உள்ளதாகவும், பணம் வைப்பிலிட்ட பின்னர் குறித்த தொலைபேசி இலக்கத்தை அடைய முடியாமல் போய்விடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரகசியமாகவே இவ்வாறான மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் இது தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

You might also like