கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிசாரால் முற்றுகை நால்வர் கைது

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் பல நாட்களாக விபரச்சார நிலையம் ஒன்று இயங்கி வந்துள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதவானின் உத்தரவுக்கு அமைய கிளிநொச்சி பொலிஸார் இன்று காலை வாடிக்கையாளர் போன்று விபச்சார நிலையத்திற்கு சென்று பணம் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்த நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

You might also like