பேருந்தில் மோதுண்ட மாணவன் ஸ்தலத்தில் பலி – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவன் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிப் பயணித்த பேருந்து, அந்த வீதியில் சென்ற மாணவன் மீது மோதியுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக 16 வயதான ஜெயக்குமார் அகிலன் என்ற மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தினையடுத்து ஒன்று திரண்ட மக்கள் குறித்த பேருந்தை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

You might also like