யாழில் தனிமையிலிருந்த ஆசிரியர் கொலை

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையிலிருந்த ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் திருடுவதற்காக சென்ற மர்மநபர்கள் தனிமையிலிருந்த ஆசிரியரை தாக்கியுள்ளனர்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் குறித்த ஆசிரியர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like