கிளிநொச்சியில் ஐந்து பாடசாலைகளுக்கு இந்தியத் துணைத்தூதுவர் விஜயம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இந்தியத் துணைத்தூதுவர் ஐந்து பாடசாலைகளுக்கு நேரில் சென்று நிலமைகளைப் பார்வையிட்டுள்ளார்.

கிளிநொச்சி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகளவான பாடசாலைகள் யுத்தத்தின் பின்னர் பெரும் வளப்பற்றாக் குறைகளுடன் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் இன்று (17) விஜயம் செய்த இந்தியத்துணைத்தூதுவர் நடராஜன் புனித பெண்கள் திரேசா கல்லூரி, உருத்திரபுரம் மகாவித்தியாலயம், சிவபாத கலையகம் அன்னைசாரதா வித்தியாலயம் முரசுமோட்டை அந்தோனியார் வித்தியாலயம் ஆகிய ஐந்து பாடசாலைகளுக்கு விஜயம் செய்து நிலமைகளை பார்வையிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பாடசாலை நூலககங்களுக்கு ஒரு தொகை நூல்களையும் வழங்கி வைத்துள்ளார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை இந்திய அரசு வழங்கி வருவதாக இந்தியத்துணைத்தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் யுத்தத்தின் பின்னர் இந்திய அரசின் நிதியுதவியுடன் 77 பாடசாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 27 பாடசாலைகளைப் புனரமைப்பதற்கு 250 மில்லியன் ரூபாவினை வழங்கவுள்ளதாகவும் இதன் மூலம் இப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

You might also like