காதலியை மிரட்ட காதலன் செய்த வேலை : சோகத்தில் மூழ்கிய குடும்பம்

காதலியை அச்சுறுத்துவதற்கு விஷம் அருந்திய இளைஞர் இறுதியாக உயிரிழந்த செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் அவரது குடும்பத்தில் ஒரே மகனாகும். பெற்றோர் மிகவும் அன்புடன் வளர்த்த திறமையான இளைஞராக அவர் காணப்பட்டுள்ளார்.

சாதாரண தர பரீட்சை போன்று உயர்தர பரீட்சையிலும் சிறந்த சித்தி பெற்ற இந்த இளைஞர் தனது காதலியை பயமுறுத்துவதற்கு நினைத்து நண்பர்களுடன் இணைந்து ஒரு திட்டமிட்டுள்ளார்.

எனினும் இது நகைச்சுவைக்காக செய்யவில்லை எனவும், காதலியுடன் உள்ள பிரச்சினை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டார் எனவும் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று திட்டமிட்டு சிறிதளவு விஷத்தை குடித்துள்ளார். எனினும் அவர் மரணிக்க எண்ணவில்லை. எனினும் அவருக்கே தெரியாமல் விஷம் அதிகமாகியுள்ளது.

என்னால் முடியவில்லை சீக்கிரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு குறித்த இளைஞர் தனது நண்ர்களிடம் தெரிவித்துள்ளார். எனினும் அவரது உயிர் பிரிந்து விட்டது என நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like