அரசாங்க ஊழியர்களுக்கான புதிய நடைமுறை! அடுத்த மாதம் முதல் அமுல்

அரசாங்க ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேறுவதனை உறுதி செய்யும் வகையில் கைவிரல் அடையாள இயந்திரம் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்குவதற்கு பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர், திணைக்கள பிரதானிகள் மற்றும் அரசு மற்றும் பெரு நிறுவனங்கள் மற்றும் சட்ட ரீதியான சபை தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக மற்றும் முகாமைத்து அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி கையொப்பம் இட்ட சுற்றிக்கை மூலம் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுளள்து.

நிதி அமைச்சரினால் 2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் இலக்கம் 373 கீழ் அனைத்து அரசாங்க நிறுவனங்களின் ஊழியர்கள் வருகை மற்றும் வெளியேறுகின்ற நேரத்தை பதிவிடுவதற்காக கைவிரல் அடையாள இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கு முன்னர் 09/2009 மற்றும் 2009.04.16 திகதியிலான சுற்றறிக்கை ஊடாக வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய இந்த முறையினை இதுவரை செயற்படுத்துவதற்கு முடியாமல் போயுள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்களின் சுற்றறிக்கைகளில் முறைக்கமைய கைவிரல் அடையாள பதிவிடும் இயந்திரம் பயன்படுத்துவதன் ஊடாக அதிகாரிகள் அலுவலகத்திற்கு வருவது மற்றும் செல்வதனை உறுதி செய்வது தொடர்பான அறிக்கையை வைத்துக் கொள்வதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like