சற்று முன் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

“எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன்..” என்று சற்று முன்னர் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு திட்டமிட்டபடி இன்று காலை ஒன்பதரை மணியில் இருந்து வடமாகாணசபையால் ஒழுங்கமைக்கப்பட்ட உயிர் நீத்த எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நடைபெறும் என்பதையும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறித்தெடுக்கப்பட்ட தமது உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலிசெய்யும் நிகழ்வுகளில் தமிழர்கள் ஈடுபடும் சோகமான நாள் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like