டெங்கு நுளம்பு பெருகும் இடமாக மாறியுள்ளது குடியிருப்பு கலாச்சார மண்டபம்

வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையிலும் புனரமைக்கப்படாமல் பாதுகாப்பற்ற பகுதியாகவே தற்போது காட்சியளிக்கின்றது.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான இந்த பகுதியில் இளைஞர்கள் ஒழுக்கமற்ற முறையில் பயன்படுத்தி வருவதால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பல தடவைகள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று அப்பகுதியிலுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

You might also like