வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு : கதறி அழும் உறவுகள்

வவுனியாவில் இன்று 18.05.2017 காலை 9.30மணியளவில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு. சந்திரகுமார் கண்ணனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகர் பகுதியிலுள்ள கல்லாறு பகுதியில் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றதுடன் இதில் கலந்து கொண்ட உறவுகளை இழந்த உறவுகள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்

தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், அப்பகுதியிலுள்ள 50ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You might also like