யாழ்.பல்கலையில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியத்தால் பல்கலைக்கழக வளாகத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு சுடர் ஏற்றி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதேவேளை, நாட்டின் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like