முள்ளிவாய்காலில் சோகம்! பரிதாபகரமாக 7 வயது சிறுவன் விபத்தில் பலி

முள்ளிவாய்காலில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்
வவுனியா பரனாட்டகல் பகுதியில் இருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு உறவினர் வீடு ஒன்றில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றுக்காக சென்றிருந்த வேளை, முள்ளிவாய்க்கால் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கி பேரூந்தின் முன்னால் வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்னால் வந்த கப் ரக வாகனம் சிறுவனில் மோதியது.
விபத்தில் காயமடைந்த சிறுவன் மான்சோலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு உயிரிளந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் கொல்லப்பட்ட சிறுவன் பரனாட்டகல் ஓமந்தை வவுனியாவை சேர்ந்த செந்தில்நாதன் சுதேசியன் என்ற 7 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை முல்லைதீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.