கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தேங்காய் உடைத்து உருக்கமான வழிபாடு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பை முன்னிட்டு கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் தேங்காய் உடைத்து உருக்கமான வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே அவர்களது ஏற்பாட்டில் குறித்த வழிபாடு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்காக நெய் விளக்கு ஏற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

You might also like