கிளிநொச்சியில் தனிச் சிங்கள கொடிகளை பறக்கவிட்டு யாழ்ப்பாணத்திற்கு தப்பி ஓடிய கும்பல்

கிளிநொச்சி நகரின் நடுவில் தனிச் சிங்கள கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

காலியில் இருந்து கிளிநொச்சிக்கு இன்று காலை பேருந்து ஒன்றில் வந்த “மஹாசேன் பலகாய சிங்கள கும்பல்” ஒன்று பெரும்பான்மையினரை பிரதிபலிக்கும் இந்த கொடியை பறக்கவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்று வரும் நிலையில், இவ்வாறு தனிச் சிங்கள கொடி பறக்கவிடப்பட்டமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மஹாசேன் பலகாய சிங்கள கும்பல், கிளிநொச்சி நகரின் மின்கம்பங்களில் இலங்கையின் தேசியக் கொடியில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இரு நிறங்களும் அற்ற இலங்கை தேசியக் கொடிகளை பறக்கவிட்டு யாழ் நோக்கி தப்பி ஓடி உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை துக்கத்துடன் நினைவுகூர்ந்து வரும் தமிழ் சமூகத்தினை கொந்தளிக்க செய்யும் வகையில் குறித்த கொடி இன்று பறக்க விடப்பட்டமை தொடர்பில் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

மறக்க நினைக்கும் இனவாத செயற்பாடுகளை மீண்டும் தூண்டிவிடும் செயலாகவே இதை தாங்கள் காண்பதாக தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், இவ்வாறு திட்டமிடப்பட்டு சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளால் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

You might also like