வீதியிலிருந்து விலகி 30 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து: 16 பேர் படுகாயம்

நுவரெலியாவில் இன்று மதியம் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பேருந்து நுவரெலியா வெலிமடை பிரதான வீதியில் கட்டுமான பகுதியில் பிரதான வீதியிலிருந்து விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட 16 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
மேலும் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.